Categories
லைப் ஸ்டைல்

சர்க்கரை நோயாளிகளே…. இனிமே தினமும் காலை கருவேப்பிலை சாப்பிடுங்க…. ஓராயிரம் நன்மைகள்….!!!

கருவேப்பிலையில் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன. காலையில் வெறும் வயிற்றில் 15 கருவேப்பிலை இலைகளை உட்கொண்டு வந்தால், பெண்களுக்கு வயிற்றை சுற்றி ஏற்படும் கொழுப்பு கரையும். ஒரு கைபிடி கருவேப்பிலையை உடன் ஒரு தேக்கரண்டி மிளகு சேர்த்து அரைத்து அரை லிட்டர் தேங்காய் எண்ணெயை கலந்து, காய்ச்சி தலைக்குத் தேய்த்து வர பொடுகு நீங்கும். தலைமுடி நன்கு வளரும். கருவேப்பிலையை உலர்த்தி பொடி செய்து தினமும் காலை மாலை தேனில் கலந்து சாப்பிட்டு வர இதயம் வலுப்படும். கருவேப்பிலையை ஜூஸ் போட்டு தினமும் குடித்து வந்தால் கொலஸ்ட்ரால் குறையும்.

சர்க்கரை நோயாளிகள் தினமும் காலையில் கருவேப்பிலை பச்சையாக உட்கொண்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும். கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு,நல்ல பொறுப்புகளையும் அதிகரித்து இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனைகளில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.

Categories

Tech |