தேவையான பொருட்கள்:
தேன் – 2 டீஸ்பூன் கற்றாழை ஜெல் – ஒரு டீஸ்பூன்
செய்முறை:
சருமத்தில் உள்ள பருக்களை நிரந்தரமாக அகற்றி, பொலிவு பெற, ஒரு பௌலில் இரண்டு டீஸ்பூன் தேன் மற்றும் ஒரு டீஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்து நன்றாக கலந்து கொள்ளவும். இதனை முகத்தில் தினமும் தடவி வந்தால், தெளிவான சருமம் கிடைக்கும்.
கற்றாழை ஜெல்லானது, சருமத்தில் உள்ள பருக்கள் மற்றும் கருந்திட்டுகள், வரட்சியான சருமம் போன்ற அனைத்து பிரச்னையை சரி செய்யும்.
கற்றாழை, சருமத்தை எப்போதும் ஈரப்பதத்தோடும், பிரகாசமாகவும் வைத்திருக்கும். கற்றாழையானது பாக்டீரியாவை எதிர்க்கும், மிக சிறந்த மூலப்பொருள் ஆகும்.
தேனானது, சருமம் மற்றும் தோல் பகுதியை மேம்பட உதவி செய்கிறது. தேன், முகத்தில் உள்ள சுருக்கங்களை முற்றிலும் நீக்கி எப்போதும் இளமைத் தோற்றத்துடன் இருக்க உதவுகிறது. இந்த டிப்ஸை தொடர்ந்து செய்து வந்தால், முகத்தில் விரைவில் மாற்றம் தெரியும்.