Categories
Tech டெக்னாலஜி

சம்மர் ஸ்பெஷல் ஆஃபர்…. ஸ்மார்ட்போனுக்கு ரூ.5000 தள்ளுபடி…. உடனே முந்துங்கள்….!!!

விவோ நிறுவனத்தின் V23e 5 ஜி ஸ்மார்ட் போனுக்கு இந்தியாவில் விலைக்குறைப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கோடைகால சிறப்பு தள்ளுபடியாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி விவோ V23e 5 ஜி ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு 5 ஆயிரம் ரூபாய் கேஷ் பேக் சலுகை வழங்கப்படுகின்றது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.25,990 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த ஸ்மார்ட்போன் மிட்நைட் ப்ளூ மற்றும் சன் சைடு கோல்டு நிறங்களில் கிடைக்கின்றது. தற்போது சம்மர் ஸ்பெஷல் ஆஃபர் மே 10ஆம் தேதி நிறைவு பெறுகின்றது.

அதுவரை இந்த மாடல் ஸ்மார்ட் போனை ரூ.20,990 விலையில் வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போனை வாங்குவோர் ஐசிஐசிஐ வங்கி, ஐடிஎப்சி வங்கி, ஒன் கார்டு மற்றும் எஸ்பிஐ வங்கி கார்டுகளை பயன்படுத்தி 5 ஆயிரம் ரூபாய் கேஷ்பேக் பெற்றுக்கொள்ள முடியும். இந்த கேஷ்பேக் சலுகை ஆஃப்லைன் விற்பனை மையங்கள் மற்றும் விவோ இந்தியா இ ஸ்டோரில் வழங்கப்படுகின்றது. இதில் பல்வேறு சிறப்பு அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. எனவே இந்த சிறப்பு சலுகையை தவறவிடாமல் போன் வாங்க திட்டமிட்டு இருந்தால் உடனே சென்று வாங்கி கொள்ளுங்கள்.

Categories

Tech |