Categories
சினிமா தமிழ் சினிமா

சம்போ சிவ சம்போ பாடல் உருவான விதம்…. “விருது பெற்ற சுந்தர் சி பாபு பேச்சு”…!!!!!!

சம்போ சிவ சம்போ பாடல் உருவான விதம் பற்றி விருது பெற்ற சுந்தர் சி பாபு கூறியுள்ளார்.

தமிழ்நாடு அரசு சார்பாக திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள், தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் மாணவர்களுக்கான விருது வழங்கும் விழா நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

இந்த விருது விழாவில் 2009 முதல் 2014 ஆம் வருடங்கள் வரை தேர்வு செய்யப்பட்ட சிறந்த திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு ரொக்க பரிசுக்கான காசோலையும் சிறந்த நடிகர், நடிகை, தொழில்நுட்ப கலைஞர்களுக்கு 5 பவுன் தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டது. இது போல சின்னத்திரை விருதுகள் 2009 ஆம் வருடம் முதல் 2013 ஆம் வருடம் வரை சிறந்த நெடுந்தொடர்களின் தயாரிப்பாளர்களுக்கு ரொக்க பரிசும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு 3 பவுன் தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டது.

சிறந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர், சிறந்த நடிகர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் 160 பேருக்கும் சிறந்த தொடர்களின் தயாரிப்பாளர்கள், சிறந்த வாழ்நாள் சாதனையாளர்கள், சிறந்த நடிகர், தொழில்நுட்ப கலைஞர்கள் என 81 பேருக்கும் தமிழக அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான குறும்படத்திக்கான சிறந்த இயக்குனர்கள், ஒலிப்பதிவாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், படத்தொகுப்பாளர்கள் படம் பதனிடுபவர்கள் என 30 பேருக்கும் மொத்தம் 314 பேருக்கு விருதுகள், காசோலை, தங்கப்பதக்கம், நினைவு பரிசு, சான்றிதழ் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

இதில் 2009 ஆம் வருடத்திற்கான சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை நாடோடிகள் திரைப்படத்திற்காக இசையமைத்த சுந்தர் சி பாபு பெற்றார். அப்பொழுது இப்பாடல் உருவான விதம் பற்றி பேசியபோது கூறியதாவது, நாடோடிகள் படத்திற்காக இயக்குனர் சமுத்திரக்கனி ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா பாடலை முதலில் இசையமைக்க சொன்னார். ஆனால் என் மனதில் சம்போ சிவ சம்போ பாடலுக்கு முன் வரும் ஜகடம் ஜகடம் தான்  ஒளித்துக்கொண்டே இருந்தது.

இதனால் நான் ஜகடம் ஜகடம் பாடலை இசையமைத்தேன். மறுநாள் சமுத்திரக்கனிக்கு அதை போட்டு காட்டிய பொழுது அவருக்கு இப்பாடல் மிகவும் பிடித்தது. ஆனால் அவர் என்னிடம் திருவிழா பாடலை தான் முதலில் தருமாறு கேட்டார். ஆனால் அவர் ஜகடம் ஜகடம் பாடலை படத்தில் இடம்பெற வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதன்பின்னர் இடைவேளை காட்சி படமாக்கும் பொழுது பின்னணியில் ஒழிக்க விட்டு படமாக்கினார்கள். பின் இப்பாடலுக்கு வரிகளை எழுத கவிஞன் யுக பாரதியை அணுகினோம். பாடல் வரிகளை எழுதி முடித்த பின் பாடலை பாட சங்கர் மகாதேவனிடம் அணுகினோம். அப்பொழுது சங்கர் மகாதேவன் ஜகடம் ஜகடம் பாடலை கேட்டேன். சிறப்பாக இருப்பதாக கூறினார். பின் அவரையே இப்பாடலை பாட வைத்தோம் என கூறியுள்ளார்.

Categories

Tech |