தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதனால் அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களும் தீபாவளி போனஸ் எப்போது வரும் என்று எதிர்பார்ப்புடன் உள்ளனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு 15 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என்று தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.
தீபாவளிக்கு பிறகு தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு தரப்படும். மேலும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் பெற்றுள்ள வங்கி கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.