பிரபல ஐடி நிறுவனம் தங்களுடைய ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஐடி நிறுவனங்களில் கடந்த சில நாட்களாக பல ஊழியர்கள் வேலையை ராஜினாமா செய்து வருகின்றனர். இதன் காரணமாக பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக சம்பள உயர்வு, விடுமுறை உள்ளிட்ட பல்வேறு விதமான சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற செப்டம்பர் மாதம் முதல் தங்களுடைய ஊழியர்களுக்கு 10% முதல் சம்பளத்தை அதிகரிக்க போவதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் விப்ரோ நிறுவனம் அட்ரீசன் விகிதத்தினால் கடந்த சில நாட்களாகவே மோசமான பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இந்த அட்ரீசன் விகிதத்தை தக்க வைப்பதற்காகவே ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, விடுமுறை போன்ற பல்வேறு விதமான சலுகைகளை நிறுவனம் அறிவித்துள்ளது. இதனையடுத்து நிறுவனத்தின் மார்ஜின் விகிதமும் கடந்த வருடத்தை விட நடப்பாண்டில் அதிக அளவில் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தங்களுடைய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதோடு பதவி உயர்வு வழங்கப்போவதாகவும் அறிவித்துள்ள நிலையில், சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களுக்கு 15% முதல் சம்பளம் அதிகரிக்கப்படலாம் என்றும் அறிவித்துள்ளது.