Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“சம்பளம் கொடுக்கல” துப்புரவு பணியாளர்கள் போராட்டம்…. பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள்….!!

ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் முன்பு துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த பணியாளர்கள்,டெங்கு பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் என மொத்தம்  188  வேலை செய்கிறார்கள். இந்த பணியாளர்களுக்கும்  நடந்து முடிந்த நகராட்சி தேர்தலில் பணியில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களுக்கும்  சம்பளம் வழங்கப்படாமல் இருந்துள்ளது.

இதனால் மனவேதனையில் இருந்த பணியாளர்கள் நேற்று நகராட்சி நிர்வாகத்தின் செயலை கண்டித்து அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர். இந்த  சம்பவம் பற்றி  கேள்விப்பட்ட உடனே  ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்திற்கு வந்த  நகராட்சி ஆணையர் மற்றும்  நகர்மன்ற தலைவர் ஆகிய  இருவரும்  போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  இந்த சம்பவம்  அப்பகுதியில் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |