கியாஸ் கசிந்து தீ பற்றிய விபத்தில் சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சானூர்மல்லாவரம் கிராமத்தில் ஏழுமலை-பரிமளா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பிரியங்கா, கீர்த்தனா என்ற 2 மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று வீட்டில் ஏழுமலையின் தாயாரான தனம்மாள் மற்றும் 2 குழந்தைகளும் இருந்தனர். இதனையடுத்து தனம்மாள் சமையலறைக்கு சென்று அடுப்பைப் பற்ற வைத்துள்ளார்.
அப்போது திடீரென கியாஸ் கசிந்து சமையல் அறை முழுவதும் தீ பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பிரியங்கா, தனம்மாள், கீர்த்தனா ஆகிய 3 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பிரியங்கா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்