சமையல் சிலிண்டர் லீக் ஆகிறது என்றால் உடனே இந்த நம்பருக்கு போன் செய்யவும்.
பெரும்பாலான வீடுகளில் தற்போது கேஸ் சிலிண்டர் உள்ளது. கிராமப்புறங்களில் கூட அதிக அளவில் தற்போது கேஸ் சிலிண்டர் பயன்படுத்தி வருகின்றனர். இப்படி நமது வீடுகளில் நாம் பயன்படுத்தும் சமையல் எரிவாயு கசிவு ஏற்பட்டால் உடனடியாக 1906 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவிக்கலாம்.
புகார் பதிவு செய்த சில நிமிடங்களில் நமது செல்போனுக்கு புகார் எண், பழுதுபார்க்க வருபவரின் செல்போன் எண், அவரிடம் நாம் தெரிவிக்க வேண்டிய ஓடிபி எண் ஆகியவை குறுஞ்செய்தியாக நமக்கு வந்துவிடும். பின்னர் சிறிது நேரத்தில் சிலிண்டரை பழுதுபார்க்கும் நபர் வீட்டிற்கு வந்து விடுவார். அவர் வந்து சமையல் எரிவாயுவில் ஏற்படும் கசிவை சரி செய்து கொடுப்பார்.