Categories
பல்சுவை

சமையல் சிலிண்டருக்கு ரூ.50 லட்சம் கிடைக்கும்….. எப்படி வாங்குறது….? முழு விவரம் இதோ….!!!!

சமையல் சிலிண்டருக்கு 50 லட்சம் வரை காப்பீடு கிடைக்கின்றது. அது எப்படி என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம்.

அனைவரும் நம் வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தி வருகிறோம். அனைவரது வீட்டிலும் சுகாதாரமான சமையல் எரிவாயு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்காக அரசு தரப்பில் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. இலவச சிலிண்டருக்கு மானியம் உள்ளிட்ட பல சலுகைகள் உள்ளது. இதனால் கிராமப்புறங்களில் என அனைத்துப் பகுதிகளிலும் சமையல் எரிவாயு பயன்பாடு பரவி வருகிறது. அதே சமயத்தில் சிலிண்டருக்கும். காப்பீடு வசதியும் உள்ளது. அது பலருக்கும் தெரிவதில்லை. சமையல் எரிவாயு சிலிண்டர்கள் திடீரென வெடிக்கக் கூடிய அபாயம் உள்ளது.

அவை இயல்பாகவே பாதுகாப்பானது என்றாலும், வாடிக்கையாளரின் கவனக்குறைவு காரணமாக அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு காப்பீடு பாதுகாப்பும் வழங்கப்படுகின்றது. சிலிண்டர் இணைப்பு வழங்கும் எண்ணெய் நிறுவனங்கள் தரப்பிலிருந்து இந்த காப்பீடு வழங்குகின்றது. அதிகபட்சமாக 50 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும். வாடிக்கையாளர்களுக்கு காப்பீடு உதவி தொகையை வழங்க வேண்டும் என்பதற்காக முன்னணி காப்பீடு நிறுவனங்களுடன் பெட்ரோலிய நிறுவனங்கள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

வாடிக்கையாளருக்கு சிலிண்டர் வழங்கும் போது அதன் நிலை குறித்து முதலில் பரிசோதனை செய்யப்படும். பின்னாட்களில் ஏதேனும் விபத்து அல்லது அசம்பாவிதங்கள் ஏற்படும் பொழுது அதற்கு காப்பீடு கிடைக்கும். பொருள் சேதம் ஏற்பட்டால் இரண்டு லட்சம் வரை கிடைக்கும். சிலிண்டர் விபத்து ஏற்பட்டால் முதலில் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும். பின்னர் சிலிண்டர் நிறுவனத்துக்குத் தகவல் கொடுக்க வேண்டும். சிலிண்டர் இன்சூரன்ஸ் வாங்குவதற்காக FIR காப்பி, மருத்துவமனை ரசீது, இறப்பு ஏதேனும் ஏற்பட்டால் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் ஆகியவை வழங்கப்பட வேண்டும்.

Categories

Tech |