Categories
தேசிய செய்திகள்

சமையல் கேஸ் சிலிண்டரில் கியூ ஆர் கோடு…. ஸ்கேன் செய்தால் மட்டும் போதும்…. அரசு புதிய அதிரடி…..!!!!

நாடு முழுவதும் எடை குறைவு உள்ளிட்ட முறைகேடுகளை தடுப்பதற்காக சமையல் கேஸ் சிலிண்டர்களில் qr கோடு எனப்படும் ரகசிய குறியீட்டை அச்சிடுவதற்கு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. அதன்படி இந்தியன் ஆயில், பாரத் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொது துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையுள்ள சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்களை விற்பனை செய்து வருகின்றன. இதனிடையே சில இடங்களில் சிலிண்டர் எடை குறைவாக விநியோகம் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதற்கு ஏஜென்சிகள் மற்றும் அவற்றில் பணியாற்றும் ஊழியர்கள் தான் காரணம். எனவே சிலிண்டர் எடுத்து வரும்போது எடையை சரிபார்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து எடை குறைவு முறைகேடுகளை தடுப்பதற்காக சமையல் கேஸ் சிலிண்டர்களில் qr கோடு எனப்படும் ரகசிய குறியீட்டை அச்சிடுவதற்கு எண்ணெய் நிறுவனங்கள் தற்போது முடிவு செய்துள்ளன. இந்த குறியீட்டை வாடிக்கையாளர்கள் தங்களுடைய மொபைல் போனில் ஸ்கேன் செய்யும் போது சிலிண்டரின் எடை, சிலிண்டர் நிரம்பிய ஆலை,தேதி மட்டும் எந்த ஏஜென்சியில் இருந்து சிலிண்டர் வந்தது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |