Categories
லைப் ஸ்டைல்

சமையல் அறையில் நாற்றம் வீசுகிறதா?… எளிய டிப்ஸ் இதோ…!!!

உங்கள் சமையலறையில் நாற்றம் வீசும் போது இதை மட்டும் செய்தால் போதும்.

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளை உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த உணவுகளை சமைத்து சாப்பிடுவது தான் மிகவும் முக்கியம். அவ்வாறு உணவுகள் சமைக்க பயன்படும் சமையலறை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் நோய்கள் அது மூலமாக பரவும். உங்கள் சமையலறையில் இருக்கும் குப்பைகளை உடனே குப்பைக்கூடையில் போடுவது நல்லது.

தினமும் இந்த குப்பையை நீக்கிவிட்டால் நாற்றம் ஏற்படாது. ஒரு சிறிய கிண்ணத்தில் பேக்கிங் சோடாவைக் கொட்டி, குப்பைக் கூடைக்குப் பக்கத்திலேயே வைப்பது பலன் தரும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பேக்கிங் சோடாவை மாற்றினால் போதும். உங்கள் சமையல் அறை எப்போதும் சுத்தமாக இருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

Categories

Tech |