சமையல் செய்யும் போது புடவையில் தீ பிடித்து மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள கொல்லர் தெருவை சார்ந்தவர் லக்ஷ்மி அம்மாள். இவர் நேற்று இரவு வீட்டில் சமையல் செய்து கொண்டிருக்கும் போது ஸ்டவ் அடுப்பில் மண்ணெண்ணெய் கசிந்து புடவையில் பட்டு தீ எரிந்தது. பின்னர் உடலில் தீ பராவியதால் அவர் அலறியுள்ளார். லட்சுமி அம்மாள் சத்தத்தை கேட்ட பக்கத்துவீட்டு நபர்கள் அவரது மகனான மகேஸ்வரனுக்கு தகவல் அளித்தனர்.
ஆனால் தீ காயங்களுடன் மீட்கப்பட்ட லக்ஷ்மி அம்மாள் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் மகேஸ்வரன் போலீசாரிடம் புகார் கொடுத்ததின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.