கொரோனா விழிப்புணர்வு, மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க முயற்சி எடுக்காமல், பொதுமக்கள் பலர் சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு படையெடுத்து இருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனோவுக்கு எதிரான யுத்தத்தின் ஒரு பகுதியாக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்ட நிலையில், சமூகத்தில் பிறரிடம் இருந்து விலகி இருங்கள் அதாவது சோசியல் டிஸ்டன்ஸ் என்பதை கடைபிடிக்க வேண்டும் என்று கொரோனா தடுப்புக்கு முதல் அறிவுரையாக வழங்குகின்றனர். முதல் நாளில் மூன்று பேருக்கு தொற்று இருந்தால், 15ஆம் நாளில் ஆயிரக்கணக்கில் தொற்று ஏற்பட்டு விடுவது மற்றும் பிற நாடுகளில் ஏற்பட்ட பாதிப்புகளின் மூலம் உறுதியாகி இருக்கிறது.
கொரோனா என்ற இந்த சங்கிலித் தொடரை அறுப்பதற்காகவே அனைவரும் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பிறரிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று கோரி உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மக்கள் வெளியில் செல்லாமல் வீட்டிலேயே இருந்தால், வைரஸ் தொற்று வெளிப்புறத்தில் பரவுவதற்கான பாதிப்புகள் தடுக்கப்படுகிறது.
இதன்மூலம் நோய் பரவல் என்ற சங்கிலித்தொடர் அறுபடுகிறது. ஆனால் சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருப்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ரயில் நிலையங்களிலும், பேருந்து நிலையங்களிலும் முண்டியெடுத்து வருகின்றனர். இதனால் நோய் பரவலின் கொரோனா சங்கிலி தொடரை அறுப்பதற்கு பதிலாக இணைத்து விடுவதற்கு வாய்ப்பு அதிகரிக்கிறது.
மேலும் மது கடைகளிலும் இடைவெளி விட்டு நிற்காமல் மது பிரியர்கள் மதுபானங்களை முண்டியடித்து வாங்கி வரும் நிகழ்வுகளும் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்தி வருகிறது. எனவே பொதுமக்கள் நோய் பரவலை தடுக்க சமூகப் பொறுப்போடு நடந்து கொள்வதோடு, இந்த இக்கட்டான தருணத்தில் சமூக விலகலை கண்டிப்பாக மதித்து நடக்க வேண்டியது அவசியம். வைரஸ் தடுப்பு வழிமுறைகள் ஒன்று பயணம் மேற்கொள்வதை தடுப்பதும் என அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.