சமூக வலைத்தளம் மூலம் தலைமை ஆசிரியைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காக கல்வி அதிகாரியை பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் மாவட்ட கல்வி அலுவலர் கீதாவை சந்தித்து 3 தலைமை ஆசிரியைகள் புகார் மனு அளித்துள்ளனர். அந்த புகாரில் வேடசந்தூர் வட்டார கல்வி அலுவலரான அருண்குமார் முகநூல் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தி தங்களுக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதாக கூறி உள்ளனர். மேலும் அதற்கான ஆதாரங்களையும் ஆசிரியர்கள் சமர்ப்பித்துள்ளனர்.
இதனால் மாவட்ட கல்வி அலுவலர் வட்டார கல்வி அலுவலரான அருண்குமாரை அழைத்து விசாரணை நடத்தியுள்ளார். அதன்பிறகு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கருப்பசாமியிடம் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் அருண் குமாரை பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.