Categories
சினிமா

சமூக வலைத்தளங்களில் இருந்து விலகிய பிரபல கவர்ச்சி நடிகை… அதிர்ச்சி…!!!

மிக பிரபலமான ஹாலிவுட் கவர்ச்சி நடிகை சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார்.

பிரபல ஹாலிவுட் கவர்ச்சி நடிகை பமீலா ஆண்டர்சன் சமூக வலைத் தளங்களில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இன்ஸ்டாகிராம், ட்விட்டர், ஃபேஸ்புக்கில் இதுதான் எனது கடைசி பதிவு. சமூக வலைத்தளங்களில் எனக்கு ஆர்வமில்லை. புத்தக வாசிப்பு மற்றும் இயற்கை உடன் நேரம் செலவிடுவது எனக்கு உந்துதலை தருகிறது. உங்கள் அன்புக்கு மிக்க நன்றி”என குறிப்பிட்டுள்ளார். அவரின் கடைசி பதிவுக்கு ரசிகர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். ஆனால் திடீரென அவர் இந்த முடிவை எடுத்திருப்பது எதனால் என்று ரசிகர்கள் அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.

Categories

Tech |