சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் சமந்தா செய்த காரியம் தற்பொழுது ரசிகர்கள் இடையே அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இவர் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சென்ற வருடம் இணையத்தில் நாக சைத்தன்யாவை பிரிவதாக அறிவித்தார். இதன் பின்னர் தனது கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் சமந்தா ஜூலை மாதத்திலருந்து இன்ஸ்டாகிராம் பக்கமே வரவில்லை. ட்விட்டர் பக்கமும் பத்து நாட்களுக்கு மேலாக வரவில்லை.
சமந்தாவின் மாஜி கணவர் நாக சைத்தன்யாவும் நடிகை சோபிதா துலிபாலாவும் காதலிப்பதாக இணையத்தில் செய்தி பரவியது. நாக சைதன்யாவின் பெயரை கெடுப்பதற்காக சமந்தா செய்த காரியம் என ரசிகர்கள் விளாசினர். இதையடுத்து சமந்தா அவர் விஷயத்தில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என கூறினார். இதனால் தற்போது சமூக வலைதளங்களில் இருந்து ஒதுங்கி இருப்பதாக சொல்லப்படுகின்றது. இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சமந்தா முதல் முறையாக தனது விவாகரத்துக் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார் குறிப்பிடத்தக்கது.