Categories
சினிமா

சமூக வலைதளத்தில் இருந்து விலகிய ராஷி கண்ணா….. இது தான் காரணமா?….. வெளியான பரபரப்பு தகவல்….!!!

தமிழ் சினிமாவில் இமைக்கா நொடிகள், அயோக்யா, அடங்கமறு, சங்கத்தமிழன், தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களில் நடித்தவர் ராஷிக் கண்ணா. இவர் தற்போது கார்த்திவுடன் சர்தார் படத்தில் நடித்து வருகிறார். இவர் தமிழ் தெலுங்கு மலையாள என பழமொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் ராஷி கண்ணா ட்விட்டரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

“என் டிவிட்டர் கணக்கை செயலிழக்க வைத்து விட்டேன். இன்ஸ்டாகிராமில் தொடர்வேன்” என்று தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் தென் இந்திய சினிமாவை பற்றி தவறாக கூறியதால் சர்ச்சையில் சிக்கி ட்விட்டரில் கடமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் இதுவும் அவர் விலக ஒரு காரணமாக இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |