கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களின் மூலம் கேரள முதல்-மந்திரி பினராயிவிஜயனுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. பாலக்காடு எலப்புள்ளி கிராமப் பகுதியில் வசித்து வருபவர் ஜெயபிரகாஷ். 44 வயதுடைய இவர் பா. ஜனதா தொண்டர் ஆவார். இந்தநிலையில் ஜெயபிரகாஷ் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சமூக வலைதளங்கள் மூலம் கேரள முதல்-மந்திரி எனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் ஆபாசமாகவும் பேசி உள்ளதாக சொல்லப்படுகிறது.
இதைப் பற்றி அறிந்த கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் ஜெயப்பிரகாஷ் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் காவல்துறையினர் ஜெயப்பிரகாஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதை அறிந்த ஜெயபிரகாஷ் தலைமறைவாகியுள்ளார். மேலும் காவல்துறையினர் ஜெயபிரகாஷ் தேடி வருகின்றனர்.