Categories
மாநில செய்திகள்

சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்ட அதிமுகவினர்- மக்கள் அச்சம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்க அழைத்து வரப்பட்ட அதிமுகவினர் சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு திருச்சி சர்வதேச விமான நிலையம் முன்பு கூடினர். ஊருக்கு உபதேசம் செய்யும் ஆளுங்கட்சியினரின் இந்த அலட்சியத்தால் கொரோனா பரவக் கூடும் என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருச்சிக்கு வருகை தந்தார். அவரை வரவேற்பதற்காக புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்டங்களை சேர்ந்த அதிமுகவினர் வேன் மற்றும் சரக்கு வாகனங்களில் அழைத்து வரப்பட்டனர். இதனால் விமான நிலைய சாலை முழுவதும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஆக காட்சி அளித்தது.

சாலை மார்க்கமாக புதுக்கோட்டை செல்லும் முதலமைச்சரை வரவேற்க சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு ஒரே இடத்தில் கூடியிருந்தனர். ஊருக்கு உபதேசம் செய்யும் ஆளுங்கட்சியினர் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருப்பது கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்

Categories

Tech |