Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சமூக அக்கறையோடு பணியாற்றும் அஜித் ரசிகர்கள்… குவியும் பாராட்டு…!!!

விருதுநகர் மாவட்டத்தில் அஜித் ரசிகர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை குளிக்க வைத்து சுத்தப்படுத்தி வருவது பாராட்டை பெற்றுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை குளிக்க வைத்து அஜித் ரசிகர்கள் சுத்தப் படுத்தி வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரத்தில் வாரம்தோறும் ஒவ்வொரு ஊர்களிலும் இருக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட நபரை குளிக்க வைத்து, முடி திருத்தம் செய்து, அவர்களுக்கு புத்தாடை அணிவித்து வருகின்றனர். அவர்களின் இந்த மனப்பான்மை பெரிதும் பாராட்டப்படுகிறது. அதனால் அஜித் ரசிகர்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். இது மாதிரியான இளைஞர்கள் தொண்டு செய்து வருவதால் பலரும் முன்வந்து சில சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Categories

Tech |