Categories
சினிமா

சமூகவலைத்தளப் பக்கத்தில் ரஜினி செய்த செயல்…. பாராட்டும் ரசிகர்கள்….!!!!

நம் நாடு சுதந்திரம் பெற்று 75 வருடங்கள் நிறைவுபெறுகிறது. இதை கொண்டாடும் விதமாக “சுதந்திரதின அமிர்த பெருவிழா” எனும் பெயரில் மத்திய அரசு பல செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இல்லம் தோறும் தேசிய கொடி எனும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அதன்படி, வரும் 13-ஆம் தேதி முதல் சுதந்திர தினமான 15-ம் தேதி வரையிலான 3 நாட்கள் தங்களது வீடுகளில் பொதுமக்கள் மூவர்ண கொடியை பட்டொளி வீசி பறக்கச் செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையில் சென்ற 2- 15ம் தேதி வரை அனைத்து இந்தியர்களும் தங்களுடைய சமூகஊடக கணக்குகளில் முகப்பு படமாக தேசிய கொடியை வைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு விடுத்திருந்தார். மேலும் தன் டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூகவலைதள பக்கங்களின் முகப்புபடத்தில் தேசிய கொடியை உடனே மோடி பதிவேற்றம் செய்தார். அதன்பின் மத்திய மந்திரிகள், பா.ஜ.க. உட்பட பல தரப்பினரும் தங்களது சமூகஊடக பக்கங்களில் தேசிய கொடியை முகப்புபடமாக பதிவேற்றம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தன் சமூகவலைத்தளப் பக்கத்தில் தேசியக் கொடியை முகப்புபடமாக மாற்றியுள்ளார். இவரின் இச்செயலை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Categories

Tech |