முதலமைச்சர் ஸ்டாலின் 69 ஆவது பிறந்தநாளுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று தனது 69 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வந்தார். அவருக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் இணையதள பக்கங்களில் வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும் சிலர் வாழ்த்து மடல்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்தனர். இந்த வகையில் கமலஹாசன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்,, ரஜினிகாந்த் இயக்குனர் பாரதிராஜா என பல பிரபலங்கள் முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இவர்களைத் தொடர்ந்து ஸ்டாலினுக்கு இயக்குனர் அமீரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில். “இதுவரை இணையதளம் மூலம் யாருக்கும் பிறந்தநாள் வாழ்த்து சொல்லாத நான் சமூகநீதி காவலரின் வாரிசுக்கு முதல்முறையாக இதயம் திருந்த வாழ்த்து மடல். சூரிய நெருப்பில் உதைத்து, காரிய இருளை தகர்த்து, ஆரூடத்தை பொய்யாக்கி, ஆரியத்தை பொடியாக்கி, ஆட்சிக் கட்டிலை அடித்தட்டு, மக்களே அர்ப்பணித்த இந்திய முதல்வனை இன்னும் பல காலம் நீ இருக்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன். அது காலத்தின் தேவை, சமூக நீதி தலைக்க, சமய நீதி ஒலிக்க, சமுதாயம் செழிக்க, சனநாயகம் சிறக்க, அன்புடன் அமீர்” என்று குறிப்பிட்டுள்ளார்.