Categories
தேசிய செய்திகள்

“சம்பளத்த கொடுங்க” கேட்ட தொழிலாளி….. உயிருடன் எரித்த முதலாளி…. பின் செய்த செயல்…!!

இரண்டு மாத சம்பள பாக்கியை கேட்டதால் விற்பனையாளரை உயிருடன் எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த கமல் கிஷோர் என்பவர் மதுபான கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த இரண்டு மாதங்களாக கமல் கிஷோருக்கு அவரது கடையின் உரிமையாளரான சுபாஷ் மற்றும் ராகேஷ் ஆகிய இருவரும் சம்பளம் கொடுக்கவில்லை. இதனால் கமல் கிஷோர் அடிக்கடி முதலாளிகளிடம் சம்பளம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார்.  இந்நிலையில் கடந்த சனிக்கிழமை கமல் கிஷோர் சம்பளம் கேட்டு தகராறு செய்ய கோபமடைந்த முதலாளிகள் இருவரும் கடையில் வைத்து அவரை தீ வைத்து கொளுத்தி விட்டனர்.

பின்னர் பாதி எரிந்த நிலையில் இறந்து போன கமல் கிஷோரின் சடலத்தை கடையில் இருந்த குளிர்சாதன பெட்டியில் வைத்து விட்டு சென்று விட்டனர். சனிக்கிழமை அன்று வீட்டைவிட்டு வெளியில் சென்ற கமல் கிஷோர் இரண்டு தினங்களாக வீட்டிற்கு திரும்பாததால் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை ஏற்ற காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அவர் வேலை பார்த்த மதுபான கடையில் தீ தெரிந்ததை பார்த்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து கடை உரிமையாளர்களை காவல்துறையினர் விசாரித்தபோது கமல் கிஷோரை எரித்து ஃப்ரீசரில் சடலத்தை வைத்தது தெரியவந்தது. குடும்பத்தினர் கூறுகையில் சம்பளத்தை கேட்டு தகராறு செய்ததால் இத்தகைய கொடும் செயலை செய்து விட்டதாககுற்றம் சாட்டினர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிந்து உரிமையாளர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |