தமிழ் சினிமாவில் கோ, ஏகன், கோவா ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் தான் நடிகை பியா பாஜ் பாய். எப்போதும் படங்களில் சுறுசுறுப்புமாக காணப்படும் பியா, இப்போது சமந்தாவின் உடல்நிலை பற்றி கூறியுள்ள தகவலில் தன்னைப் பற்றியும் ஒரு அதிர்ச்சி செய்தியை பகிர்ந்துள்ளார். அதாவது “சென்ற சில மாதங்களாகவே நடிகை சமந்தா மயோசிஸ் எனப்படும் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நோய் குறித்து ஒவ்வொரு விதமாக மீடியாக்களில் செய்திகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் தான் பியா, தற்போது சமந்தா எவ்விதமான துன்பத்தை அனுபவித்து வருகிறார் என்பது எனக்கு நன்றாக தெரியும். ஏனெனில் இதற்கு முன்பாக நானும் இதேபோன்ற ஒரு கடினமான சூழலை சந்தித்து தான் மீண்டு வந்திருக்கேன்” என்று கூறியுள்ளார்.