Categories
சினிமா

சமந்தாவுக்கு என்னாச்சு!…. வெளிநாட்டில் சிகிச்சை பெற உள்ளாரா?….. கவலையில் ரசிகர்கள்….!!!!

தென்னிந்திய மொழிகளில் 10 ஆண்டுகளைக் கடந்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் விஜய், சூர்யா உள்ளிட்ட கோலிவுட் நடிகர்கருடன் ஜோடியாக நடித்துள்ளார். அதனைப் போல தெலுங்கிலும் பல சிறப்பான படங்களை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். புஷ்பா படத்தில் ‘ஊ சொல்றியா மாமா’ பாடலுக்கு அவர் ஆடிய ஆட்டம் ரசிகர்களை குலுங்க வைத்தது. தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடித்துவரும் சமந்தா சகுந்தலா மற்றும் யசோதா ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். மேலும் விஜய் தேவர் கொண்டவுடன் குஷி படத்தில் நடித்து வருகிறார். இந்தியிலும் நடிக்க இருக்கிறார். இதனையடுத்து அவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு சரும பிரச்சனை ஏற்பட்டது. பாலிமார்பஸ் லைட் எரப்ஷன் இந்த தோல் நோயால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது, அதிக வெளிச்சத்தில் நடித்ததால் அலர்ஜி ஏற்பட்டதாக கூறியிருந்தார். இதனால் அஞ்சான் படப்பிடிப்பின் போது அவர் வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று வந்தார். சமூக வலைதளங்களை தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் சமந்தா. சமீப காலமாக இவரது எந்த போஸ்ட்டும் வெளியாகவில்லை. இறுதியில் யசோதா டீச்சர் குறித்து அறிவிப்பை மேற்கொண்டார். இந்நிலையில் தற்போது இதற்கான காரணம் வெளியாகி உள்ளது. அதன்படி சம்பந்தா கடுமையான உடல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு சென்று உள்ளார். சூரிய ஒளியால் ஏற்படும் தோல் நோயால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. நடிகை தற்போது ஓய்வில் இருப்பதாகவும், மருத்துவர்கள் ஆலோசனையின் படி பொது வெளியில் தோன்ற மாட்டார் என்று கூறப்படுகிறது. ஆனால் இதை அவர் தரப்பு உறுதிப்படுத்தவில்லை.

Categories

Tech |