நடிகை சமந்தாவிற்கு பிடித்த உணவு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. சமந்தா நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பிறகு இவர் எது செய்தாலும் அனைவராலும் கவனிக்கப்பட்டு வருகின்றது. இவர் நடிப்பில் தற்போது யசோதா திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும் சகுந்தலம் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
இவர் தற்போது ஹிந்தியிலும் தடம் பதித்துள்ளார். அடுத்தடுத்து திரைப்படங்களில் பிசியாக நடித்து வரும் சமந்தா விரும்பி உண்ணும் உணவு வகை குறித்த செய்தி வெளியாகியிருக்கின்றது. அது என்னவென்றால் சமந்தாவிற்கு பால்கோவா, டைரி மில்க் சாக்லேட், இனிப்பு பொங்கல், சுஷி போன்ற உணவு வகைகள் மிகவும் பிடிக்குமாம்.