தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தற்போது யசோதா திரைப்படத்தில் இவர் நடித்துவரும் நிலையில் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த செய்தியை இணையவாசிகள் அனைவரும் பகிர்ந்து விரைந்து குணமாக வேண்டுமென தேசிய அளவில் #SamanthaRuthPrabhu எனும் ஹாஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
மயோசிடிஸ் எனும் கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் நடிகை சமந்தா. ஜூனியர் என்டிஆர், ரகுல் ப்ரீத் சிங், ராஷி கண்ணா, வம்சி உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் சமூகவலைதள பக்கங்களில் குணமடைய வாழ்த்து தெரிவிக்கும் நிலையில். இவரது முன்னாள் கணவர் நாகசைதன்யா வாழ்த்து சொல்வாரா எனும் கேள்வி எழுந்துள்ளது. கடந்த ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றிருந்தனர்.