திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த பூமிநாதனை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். இந்த சம்பவமானது தமிழகத்தையே அதிர வைத்தது. சம்பவ இடத்திற்கு உடனே விரைந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதனுடைய கைபேசி அழைப்பில் கடைசியாக பதிவாகியிருந்த என்னை தொடர்பு கொண்டு ஒரு பெண்ணிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ஆடு திருடியது தொடர்பாக என் மகனை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பிடித்து வைத்திருப்பதாக பேசினார் என்று அவர் கூறினார். மேலும் அந்த விசாரணையில் தஞ்சாவூர் மாவட்டம் தோப்பூர் பகுதியை சேர்ந்த அந்தப் பெண்ணின் மகன் மணிகண்டன் என்பது தெரியவந்தது.
மேலும் இவருடன் 14 வயது சிறுவன் மற்றும் 9 வயது சிறுவனும் உண்டு என்பது தெரியவந்தது. இதையடுத்து உறவினர்களான இவர்கள் 3 பேரும் கே. புதுப்பட்டியில் அவர்களுடைய உறவினர் வீட்டில் தலைமறைவாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை காவல்துறையினர் அங்கு வந்து அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் மணிகண்டனை சிறையிலும், மற்ற 2 சிறுவர்களையும் சிறுவர் சீர்திருத்த பள்ளிகளிலும், அடைக்க பணிகளை மேற்கொண்டனர்.