உத்திரபிரதேச மாநில சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று நடைபெற்றுள்ளது. கூட்டத்தின் போது இரண்டு எம்எல்ஏக்கள் செய்த காரியம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது சபை நடவடிக்கையின் போது பா ஜனதா எம்எல்ஏ ராகேஷ் கோ சுவாமி மொபைலில் ஆன்லைன் ரம்மி கேம் விளையாடிக் கொண்டிருந்தார். மற்றொருவர் தனது கையில் புகையிலை கொட்டி வாயில் போட்டு மென்று கொண்டிருந்தார். இந்த இரண்டு வீடியோவையும் சமஜ்வாடி கட்சி தனது அதிகார ட்விட்டர் மட்டும் பேஸ்புக்கில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
सदन की गरिमा को तार-तार कर रहे भाजपा विधायक!
महोबा से भाजपा विधायक सदन में मोबाइल गेम खेल रहे, झांसी से भाजपा विधायक तंबाकू खा रहे।
इन लोगों के पास जनता के मुद्दों के जवाब हैं नहीं और सदन को मनोरंजन का अड्डा बना रहे।
बेहद निंदनीय एवं शर्मनाक ! pic.twitter.com/j699IxTFkp
— Samajwadi Party (@samajwadiparty) September 24, 2022
அந்த வீடியோவுடன் சபையின் கண்ணியத்தை கெடுக்கும் பா ஜனதா எம்எல்ஏக்கள் என குறிப்பிட்டு இருந்தது. மேலும் அத்துடன் மஹோபாவை சேர்ந்த எம்எல்ஏ சபையில் மொபைல் கேம் விளையாடுகின்றார். ஜான்சியின் பாஜக எம்எல்ஏ புகையிலை சாப்பிடுகிறார் இவர்களிடம் மக்களின் பிரச்சினைக்கு பதில் இல்லை. மேலும் சட்டப்பேரவை பொழுதுபோக்கு இடமாக வைத்திருக்கின்றனர் இவர்களின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது மற்றும் வெட்கக்கேடானது என பதிவிட்டு இருக்கிறது. இந்த நிலையில் இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது நெட்டிசன்கள் இரண்டு எம்எல்ஏக்களின் செயல்களை விமர்சனம் செய்து வருகின்றார்கள்.