Categories
தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்களே!…. இனி டென்ஷன் ஆகாதீங்க!…. தரிசன நேரத்தில் மாற்றம்….. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

சபரிமலை கோயில் நடை இந்த வருடம் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சென்ற 16ம் தேதி மாலை திறக்கப்பட்டது. சபரிமலை நடை திறப்பை முன்னிட்டு 13,000 காவல்துறையினர் 6 கட்டங்களாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இப்போது “வெர்ச்சுவல் கியூ” வாயிலாக முன் பதிவு செய்த பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்படுகிறது. இதற்கிடையில் ஐயப்பனை தரிசிக்க வரக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கையானது அதிகரித்துள்ளது.

வெறும் 6 நாட்களில் மட்டும் பக்தர்களின் எண்ணிக்கையானது 3 லட்சத்தை தாண்டியது. இவ்வாறு பக்தர்களின் வருகை நாளுக்குநாள் அதிகரித்து வந்த நிலையில், இன்று முதல் சுவாமி தரிசனம் செய்ய கூடுதலாக 1 மணிநேரம் அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு அடைக்கப்படும். அதன்பின் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு அடைக்கப்படும்.

இந்த வருடம் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக் காலத்தில் பத்தர்கள் வருகை அதிகரிப்பை தொடர்ந்து, அதிகாலை 4 மணிக்கு பதில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் ஒரு மணிக்கு அடைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 10 மணிக்குப் பதில் இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |