Categories
தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!

நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கோயில்களுக்குச் பக்தர்கள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்த வந்த நிலையில் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சபரிமலை தேவஸ்தானத்திற்கு செல்லும் பக்தர்கள் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். அதுமட்டுமில்லாமல் கோவிலில் தங்குவதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து கேரளா மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்தது இதனால் சபரிமலைக்கு செல்லும் வழியில் உள்ள பம்பை நதி நீர்வரத்து அதிகரித்ததால் வெளியூரிலிருந்து வந்த பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். அதன்பிறகு பம்பை நதியில் நிலையை கோயில் நிர்வாக சிறப்பு அதிகாரி அர்ஜுன் பாண்டி ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுக்குப் பிறகு மழை பெய்யும் நாட்களில் இரவு நேரங்களில் பம்பையில் தங்கிக் கொள்ளலாம் என்று அறிவித்தார். இதனால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் மண்டல பூஜை தினத்தை முன்னிட்டு வருகிற 26-ஆம் தேதி அன்று பக்தர்கள் சபரிமலைக்கு அனுமதிக்கப்படுகின்றனர். அதன்பிறகு மகரவிளக்கு பண்டிகையை முன்னிட்டு வருகிற டிசம்பர் 30-ஆம் தேதி முதல் ஜனவரி 20ஆம் தேதி வரை கோயில் நடை மீண்டும் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |