சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நவம்பர் 17ஆம் தேதி முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் இந்த வருடம் பக்தர்கள் அனைவரும் ஆன்லைன் முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் முன்பதிவு செய்ய இயலாதவர்களுக்கு ஸ்பாட் புக்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடத்தை விட இந்த வருடம் பக்தர்களின் கூட்டம் அதிகமாகவே இருப்பதால் சுவாமி தரிசனம் செய்ய நீண்ட நேரம் ஆகின்றது.
இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் இனி இரவு 11.30 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. தினசரி ஒரு லட்சம் பக்தர்கள் கோவிலுக்கு வருகை தருவதால் சாமி தரிசனம் செய்ய 10 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் இருப்பதை தொடர்ந்து தேவஸ்தானம் இந்த நடவடிக்கையை எடுத்து இருப்பதாக தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு இரவு 11 மணிக்கு எல்லாம் நடை அடைக்கப்பட்ட நிலையில் இனி வரும் நாட்களில் 11.30 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.