Categories
தேசிய செய்திகள்

சபரிமலை தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்….. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

சபரிமலையில் தரிசனம் செய்வதற்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாகப்பட்டுள்ளதாக பக்தர்களுக்கு புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.பாதுகாப்பு காரணங்களுக்காக பக்தர்களின் தகவல்களை சேகரிக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருந்தாலும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆன்லைன் முன்பதிவு அவசியம் இல்லை. சபரிமலையில் நவம்பர் 16ஆம் தேதி மாலை 5 மணிக்கு தரிசனத்திற்காக நடை திறக்கப்படுகின்றது.

இதனிடையே நிலக்கல் உள்ளிட்ட 12 இடங்களில் ஸ்பாட் புக்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. நிலக்கல்லில் மட்டும் மொத்தம் பத்து கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த வருடம் தேவஸ்தானம் வாரியத்தால் மெய்நிகர் வரிசை முன் பதிவு செய்யப்படுகின்றது, இது முற்றிலும் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்ய sabarimalaonline.org என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories

Tech |