சபரிமலை ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்களுக்காக 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக சென்னையில் 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது பற்றி அமைச்சர் பேசும்போது, ஐயப்பன் கோவிலில் வருடாந்திர மண்டல மாத பூஜைக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து டிசம்பர் மாதம் 27ஆம் தேதி மண்டல பூஜை முடித்து இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகின்றது.
இந்நிலையில் இந்த தகவல் மையமானது நேற்று முதல் அடுத்த வருடம் ஜனவரி 20-ம் தேதி வரை செயல்படும் எனவும் தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 044-28339999-ஐ பயன்படுத்தி விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என அவர் கூறியுள்ளார்.