சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று சான்றிதழ் கட்டாயம் என கேரள முதல்வர் திரு. பினராய்டு விஜயன் தெரிவித்துள்ளார்.
பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் பக்தர்கள் வழிபாட்டிற்காக இன்று முதல் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் பின்பற்றப்பட வேண்டிய கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முதல்வர் திரு. பினராய்டு விஜயன் வெளியிட்டார். அப்போது பேசிய அவர் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்பவர்கள் கொரோனா பாதிப்பு இல்லை என்று சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டுமென்றும். சபரிமலை கோவிலுக்கு வரும் பக்தர்களின் உடல்நிலை மலையேற தகுதியுடன் தான் உள்ளது என்பதற்கான உடல்நலத்தகுதி சான்றிதழ்களும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.