சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் முக கவசம் அணிய வேண்டும் என தேவஸ்தானம் கூறியுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் மாலை போட்டு விரதம் இருந்து செல்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்ய செல்கின்றனர். இந்நிலையில் மண்டல பூஜைக்கான கட்டுப்பாடுகள் இந்த ஆண்டு முழுமையாக தளர்த்தப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் தரிசனத்திற்காக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு உடனடி தரிசனத்திற்கான முன்பதிவு செய்யும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பக்தர்கள் தினமும் 10 மணி நேரம் காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்கின்றனர்.
மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 90 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில் மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டு மாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு வந்தது. தற்போது 3 மணிக்கு திறக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 84 ஆயிரத்து 16 பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில் உடனடி தரிசனம் முன்பதிவு மூலமாகவும் ஏராளம் பக்தர்கள் சாமியை தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் தற்போது 8 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கூட்டம் அதிகரிப்பதால் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயமாக முக கவசம் அணிந்து வர வேண்டி என தேவஸ்தானம் கோரிக்கை விடுத்துள்ளது.