தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவர் தற்போது மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் அருண்மொழி வர்மனாக நடித்துள்ளார். ஜெயராம் ஆழ்வார்கடியானாகவும் நடித்துள்ளார். இந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் இருவரும் பங்கேற்று வருகிறார்கள். இந்நிலையில் கொச்சிக்கு சென்ற ஜெயம் ரவியும், ஜெயராமும் அங்கிருந்து சபரிமலைக்கு போய் சாமி தரிசனம் செய்தனர். அந்த புகைப்படங்களை ஜெயம் ரவி தனது twitter பக்கத்தில் வெளியிட்டு, “பொன்னியின் செல்வனில் ஆழ்வார்கடியான் நம்பியை போல் நிஜ வாழ்க்கையிலும் அன்போடு என்னை வழி நடத்தும் குருசாமி ஜெயராமுடன் பம்பையில்” இந்த பதிவை பகிர்ந்துள்ளார்.
இருவரும் ஐயப்பனை தரிசனம் செய்த புகைப்படங்கள் வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்று ஜெயம் ரவி பேசும்போது, ஜெயம்ராமுடன் பல வருடங்களாக எனக்கு நெருக்கமான நட்பு உள்ளது. அதையும் தாண்டி எனக்கு குருசாமியாக இருந்துள்ளார். நிஜ வாழ்க்கையில் வழிகாட்டியாகவும் இருக்கிறார். அவருடன் பொன்னியன் செல்வனில் இணைந்து நடித்தது மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். இப்போது ஐயப்பனையும் ஒன்றாக தரிசனம் செய்துள்ளனர்.