சபரிமலை ஐயப்பன் கோவிலில் 8 நாட்களில் 10.15 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சித்திரை மாதம் விஷு சிறப்பு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. இந்த பூஜையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் ஐயப்பன் கோவிலில் தரிசனத்திற்கு வந்து இருந்தனர். அவர்கள் செலுத்திய காணிக்கையாக ரூ.4.38 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது என்று கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மொத்தம் 8 நாட்களில் 10.15 கோடி ரூபாய் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Categories
சபரிமலை ஐயப்பன் கோவிலில் 8 நாட்களில் ரூ.10.15 கோடி வருவாய்….. கோயில் நிர்வாகம்….!!!!
