Categories
தேசிய செய்திகள்

“சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி”…? உத்தரவை வாபஸ் பெற்ற கேரளா அரசு….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று முன்தினம் திறக்கப்பட்டுள்ளது.  இந்த வருடம் கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாத காரணத்தினால் பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சபரிமலையில் 1,500 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். அவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய ஒரு புத்தகம் வழங்கப்பட்டுள்ளது.

அந்த புத்தகத்தில் நீதிமன்ற தீர்ப்பின்படி அனைத்து வயது பெண்களையும் சபரிமலைக்கு அனுமதிக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது கேரளா அரசு புத்தகத்தில்  தவறுதலாக அச்சடிக்கப்பட்டுள்ளதாக கூறி இதனை வாபஸ் செய்துள்ளது. இந்நிலையில்  கேரள தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது, சபரிமலையில் 10 வயதிற்கு கீழும், 50 வயதிற்கு மேலும் உள்ள பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் புத்தகத்தில் தவறாக அச்சடிக்கப்பட்டுள்ளதாகவும்  விளக்கம் அளித்துள்ளார்.

Categories

Tech |