கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் சபரிமலையில் மாசி மாத பூஜையில் பக்தர்கள் அனுமதிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது. இதில் தற்போது மாசி மாத பூஜைக்காக பிப்ரவரி 12ஆம் தேதியன்று மாலை நடை திறக்கப்படுகிறது.
இது குறித்து தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பக்தர்கள் பிப்ரவரி 13 முதல் 17 வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். சபரிமலை தரிசனத்திற்காக முன்பதிவுwww.sabarimalaonline.org என்ற இணையதளத்தில் தொடங்கியுள்ளது. இதில் தினமும் சுமார் 15,000 பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக தடுப்பூசி சான்றிதழ் மற்றும் ஆர்.டி.பி.சி.ஆர் நெகடிவ் சான்றிதழ் கொண்டு வர வேண்டும்என்று தெரிவித்துள்ளது.