நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கின் காரணமாக ஒரு சில மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் பல மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் கேரளாவில் கொரோனா குறைந்து வரும் நிலையில்,ஜிகா வைரஸ் தொடர்ந்து மிரட்டி வருகிறது.
இதனால் மாநிலம் முழுவதும் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம். இப்போதைய சூழலில் கடைகளை திறக்க உகந்ததாக இல்லை. எனவே வியாபாரிகள் பொறுமை காக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.