போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபரை கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேருந்து நிலையம் அருகே கமுதி இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் அவர் கருங்குளம் பகுதியை சேர்ந்த வழிவிடுமுருகன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவரிடம் 60 கிராம் எடையுள்ள சுமார் 12 கஞ்சா பொட்டலங்கள் இருந்துள்ளது. அதனை பறிமுதல் செய்த போலீசார் வழிவிடுமுருகனையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.