கடந்த 1994 ஆம் வருட முதல் 2005 ஆம் வருடம் வரை சந்திரிகா குமாரதுங்கா என்பவர் இலங்கை நாட்டின் அதிபராக இருந்துள்ளார். அப்போது அவரை கொலை செய்வதற்கான முயற்சி நடைபெற்றதாக விடுதலை புலிகள் படையைச் சேர்ந்த எட்டு தமிழர்களை இலங்கை ராணுவத்தினர் கைது செய்துள்ளனர். அவர்களின் மூன்று பேருக்கு தலா முப்பது வருட சிறை தண்டனையும், மற்றவர்களுக்கு தலா ஐந்து முதல் 14 வருடங்கள் வரையிலான சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதில் 30 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரும் தல 22 வருடங்களும் மற்றவர்கள் தலா 11 வருடங்களுக்கும் மேலும் சிறை தண்டனை அனுபவித்து விட்டனர் இதனால் அவர்களை விடுதலை செய்யக்கோரி தமிழ் அமைப்புகளும் தமிழ் அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். இதனை அடுத்து அந்த கோரிக்கையின் பேரில் இலங்கையின் தற்போதைய அதிபர் ரனில் விக்ரமசிங்கே தமிழர்கள் எட்டு பேருக்கும் பொது மன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார். அதன் பெயரில் அவர்கள் எட்டு பேரும் தற்போது விடுதலை செய்யப்பட்டு இருக்கின்றனர்.