Categories
தேசிய செய்திகள்

சந்திரயான்-3 விண்கலம்: எப்போது விண்ணில் ஏவப்படும்?…. இஸ்ரோ தலைவர் வெளியிட்ட தகவல்….!!!!

சந்திரயான்2 விண்கலமானது சென்ற 2019ம் வருடம் ஜூலை 22ம் தேதியன்று விண்ணில் செலுத்தப்பட்டது. புவி சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்ட விண்கலம், படிப் படியாக 5 முறை புவி வட்டப்பாதையில் உயர்த்தப்பட்டது. இதையடுத்து அதே வருடத்தில் செப்டம்பர் 2ஆம் தேதி சந்திரயான்-2 விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்து நிலவின் மேற்பரப்பை நோக்கி பயணித்தது. இருப்பினும் நிலவுக்கு 2.1 கி.மீ தொலைவில் இருந்தபோது விக்ரம் லேண்டரின் தகவல் துண்டிக்கப்பட்டது. நிலவின் இருண்டபக்கத்தில் விழுந்த லேண்டரை விஞ்ஞானிகளால் தொடர்புகொள்ள இயலாமல் போனது.

தற்போது சந்திரயான்3 விண்கலத்தை தயாரிக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், இவற்றில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுவந்தனர். இருப்பினும் கொரோனா தொற்று, அதனை தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் போன்றவற்றால் தொடர்ச்சியாக திட்டம் நிறைவேறுவதில் காலதாமதம் நிலவியது. இந்த நிலையில் ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் 2வது ஏவுதளத்தில் இருந்து இன்று அதிகாலை ஜி.எஸ்.எல்.வி.-3 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

அந்த வகையில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒன்வெப் நிறுவனத்தின் 6 டன் எடை உள்ள 36 செயற்கைகோள்களை முதல்முறையாக இஸ்ரோ விண்ணில் ஏவியுள்ளது. அதன்பின் இஸ்ரோ தலைவரான சோம நாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது, சந்திரயான்-3 விண்கலமானது ஏறக் குறைய தயாராகிவிட்டது. இறுதியான ஒருங்கிணைப்புபணி மற்றும் பரிசோதனை போன்றவை ஏறக்குறைய நிறைவடைந்துவிட்டது. இருப்பினும் சில பரிசோதனைகள் இன்னும் முடிவடையாமல் இருக்கிறது.

இதன் காரணமாக அவற்றை சிறிது காலத்திற்குள் செய்துமுடிக்க நாங்கள் விரும்புகிறோம். பிப்ரவரி மற்றும் ஜூன் என பொருந்தகூடிய இருகாலங்களில் ஜூனை (2023-ம் ஆண்டு) தேர்வுசெய்து அதை விண்ணில் செலுத்த நாங்கள் முடிவுசெய்துள்ளோம் என தெரிவித்துள்ளார். விண்ணில் அனுப்பிய 36 செயற்கைக் கோள்களில் 16 செயற்கைக்கோள்கள் தனியாக பிரிந்து பாதுகாப்புடன் சென்றுவிட்டது. மீதம் உள்ள 20 செயற்கைக்கோள்கள் அடுத்து பிரிந்து போகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |