Categories
சினிமா தமிழ் சினிமா

‘சந்திரமுகி-2’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கிறாரா?… இயக்குனர் பி.வாசு விளக்கம்…!!!

‘சந்திரமுகி-2’ படத்தில் ரஜினி நடிப்பதாக பரவிய தகவலுக்கு இயக்குனர் பி.வாசு விளக்கமளித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் கடந்த 2005-ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் சந்திரமுகி. பி.வாசு இயக்கியிருந்த இந்த படத்தில் நயன்தாரா, பிரபு, ஜோதிகா, நாசர், வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் சந்திரமுகி- 2 படம் உருவாவது குறித்த அறிவிப்பு வெளியாகியிருந்தது . பி.வாசு இயக்கும் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இந்நிலையில் சந்திரமுகி-2 படத்தில் நடிகர் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் பரவி வந்தது. இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்த பி.வாசு ‘சந்திரமுகி 2 படத்திற்கான கதை, திரைக்கதை உருவாக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .

Rajini has no connection to my views: Lawrence - DTNext.in

வருகிற செப்டம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்புகளை தொடங்க திட்டமிட்டுள்ளோம். சந்திரமுகி முதல் பாகத்தில் நடித்தவர்கள் இரண்டாம் பாகத்தில் கிடையாது. நடிகர் ரஜினி சந்திரமுகி-2 படத்தில் நடிப்பதாக பரவும் தகவல் உண்மையில்லை. இந்த படத்தின் கதை வேறு மாதிரி இருக்கும். தற்போது நடிகர் ராகவா லாரன்ஸ் ருத்ரன் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து இவர் சந்திரமுகி-2 படப்பிடிப்பில் இணைவார்’ என கூறியுள்ளார்.

Categories

Tech |