சந்தானம் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் சந்தானம். இவர் முதலில் நகைச்சுவை நடிகராக நடித்த வந்த நிலையில் தற்போது கதாநாயகனாக நடித்த வருகின்றார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் குழு குழு. இந்நிலையில் தற்பொழுது பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்திற்கு பெயரிடப்படாத நிலையில் சாண்டா 15 என கூறப்பட்டு வருகின்றது.
இத்திரைப்படத்தில் தன்யா போப், ராகினி திரிவேதி உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்கள். அர்ஜுன் ஜனயா இசையமைக்கும் இத்திரைப்படத்தை ஃபார்டியூன் பிலிம்ஸ் பட நிர்வனம் சார்பாக நவீன்ராஜ் தயாரிக்கின்றார். இந்த நிலையில் இத்திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் கௌதமேனன் இன்று காலை 11.29 மணிக்கு வெளியிடுவார் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
Our #SANTA15 First Look will be revealed by stylish actor-director @menongautham Tomorrow, Ganesha Chathurthi at 11:29 AM 🎉@iamsanthanam @iamprashantraj @TanyaHope_offl @raginidwivedi24 @ArjunJanyaMusic @iamnaveenraaj #FortuneFilms #ProductionNo10 @johnsoncinepro pic.twitter.com/qejFYnRmXr
— Fortune films (@Fortune_films) August 30, 2022