Categories
சினிமா தமிழ் சினிமா

சந்தானத்தின் ‘டிக்கிலோனா’… ட்ரெண்டாகும் ‘பேர் வெச்சாலும்’ ரீமிக்ஸ் பாடல் வீடியோ…!!!

டிக்கிலோனா படத்தில் இடம்பெற்ற ‘பேர் வெச்சாலும்’ பாடல் வீடியோ வெளியாகியுள்ளது

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம் தற்போது கதாநாயகனாக களமிறங்கியுள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான பாரிஸ் ஜெயராஜ் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள சர்வர் சுந்தரம், டிக்கிலோனா, சபாபதி ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதில் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள டிக்கிலோனா படம் வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி நேரடியாக ஜீ5 ஓடிடியில் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் ஷெரின், அனகா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

மேலும் ஆனந்தராஜ், யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், முனிஸ்காந்த், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் டிக்கிலோனா படத்தில் இடம்பெற்ற ரீமிக்ஸ் பாடலான ‘பேர் வெச்சாலும் வைக்காம போனாலும்’ பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. தற்போது இந்த கலக்கலான வீடியோ பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |