சந்தானம் தற்போது நடிக்கவிருக்கும் திரைப்படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் சந்தானம். இவர் முதலில் சின்னத்திரையில் அறிமுகமாகி நகைச்சுவை நடிகராக வலம் வந்து கொண்டிருந்தார். இவர், “எத்தனை நாளைக்கு நாமும் ஹீரோவோட ஃபிரண்ட் ஆகவே நடிக்கிறது நானும் ஹீரோவாக நடிக்கலாம்” என்று முடிவெடுத்தார். இவர் ஹீரோவாக இனிமே இப்படித்தான் படத்தின் மூலம் அறிமுகமானார்.
தற்போது இவர் ஹீரோவாக நடித்து வருகின்றார். இவர் ஹீரோவாக தில்லுக்கு துட்டு, டாகால்டி, ஏ1, சக்கைபோடு போடு ராஜா, பாரிஸ் ஜெயராஜ், சபாபதி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சந்தானம் தற்போது ஏஜெண்ட் கண்ணாயிரம் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை ரத்தினகுமார் இயக்குகிறாராம். இவர்கள் இணையும் செய்தி அதிகாரப்பூர்வமாக மார்ச் 16 ஆம் தேதி வெளியாக கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.