பாலக்கீரை தோசை செய்ய தேவையான பொருட்கள்:
பச்சரிசி – ஒரு கப்
உளுத்தம்பருப்பு – ஒரு தேக்கரண்டி
பாலக்கீரை – ஒரு கப் நறுக்கிய
பச்சை மிளகாய் – 3
பெருங்காயத்தூள் – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
பச்சரிசியையும், உளுத்தம்பருப்பையும் ஒன்றாக சேர்த்து 2 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
ஊறிய அரிசி பருப்புடன், பச்சை மிளகாய் 3, உப்பு(தேவையான அளவு), பெருங்காயத்தூள் ஒரு தேக்கரண்டி, நறுக்கிய பாலக்கீரை ஒரு கப் ஆகியவற்றை சேர்த்து மிருதுவாக அரைத்துக் எடுக்கவும்.
அரைத்த மாவை, குறைந்தது 5 மணி நேரம் புளிக்க வைத்தப்பின் பொங்கியதும் தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவை ஊற்றி சுட்டு எடுக்கவும். கீரையில் வழவழப்பு தன்மை அதிகம் இருப்பதால் உளுந்தை குறைத்துப் போட வேண்டும். பாலக்கீரை தோசை ரெடி.